18 Mar 2024

சபாநாயகருக்கு எதிரான தீர்மானங்கள் பற்றி ஆக்கபூர்வமான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளது.

SHARE

சபாநாயகருக்கு எதிரான தீர்மானங்கள் பற்றி ஆக்கபூர்வமான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளது.

சபாநாயகருக்கு எதிரான தீர்மானங்கள் பற்றி எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி தலைமையில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்  முன்னெடுக்கப்படவுள்ளன. ஆளும் அரசாங்கத்தின் கட்சி ஒரு சரியான தீர்மானத்தை எடுப்போம்.

என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை(17.03.2024) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

எதிர்க்கட்சியினர்  தற்போது உள்ள அரசியல் சூழலை பயன்படுத்தி தமது இருப்பினைத் தக்க வைப்பதற்காக பாராளுமன்றத் தேர்தலை முன்பு நடாத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் ஆளும்கட்சிக்குள் இருந்து சிறு பிரிவினர் பாராளுமன்றத் தேர்தலைதான் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக கணக்காய்வு அறிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் இவர்கள் பணபலத்தை வைத்து வென்று விடலாம் என்று நினைக்கின்றனர்.

இரண்டு தேர்தல்களையும் இவ்வருடத்தில் நடாத்த வேண்டுமானால் அதிக நிதி தேவைப்படும். அது தற்போதைக்கு சாத்தியமா?

நாடு தற்போது வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தில் எழுச்சி கண்டு வருகின்றது. நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இவ்வாண்டு பொருத்தமான தேர்தல் ஜனாதிபதித் தேர்தர்தல்தான். எனவே பாராளுமன்றத்தின் காலாம் முடிவுந்த பின்னர் அதை நடத்துவது தான் முறை காலம் முடிவடைந்த தேர்தல்கள் இன்னும் நடைபெறாமல் இருக்கின்றன.

அரசியல் இலாபங்களுக்காக முடிவு எடுக்கின்ற அவர்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.








SHARE

Author: verified_user

0 Comments: