இன நல்லிணக்கத்திற்காக கலைப்பணி ஆற்றிய கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு.
புத்தசாசன மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் இன நல்லிணக்கத்திற்காக கலைப்பணி ஆற்றிய கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மண்முனை வடக்கு கலாச்சார பிரிவினரின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை(24.03.2024) இரவு மட்டக்களப்பு வாசிகசாலை அருகாமையில் உள்ள வெளியேறங்கில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில்; இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக புத்தசாசன மத மற்றும் கலாச்சார அலுவலக அமைச்சின் மேலதிக செயலாளர் திலக் நந்தன கெட்டி ஆராய்ச்சி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன், புத்தசாசன மத மற்றும் கலாச்சார அலுவலக அமைச்சின் பணிப்பாளர் கலாநிதி பிரசாத் ரண சிங்க மண்வடக்கு பிரதேச செயலாளர் வி வாசுதேவன் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ராணுவ உயர் அதிகாரிகள் கலைஞர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதேச செயலக உயர் அதிகாரிகள் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு கலாச்சார பிரிவினரின் ஏற்பாட்டில் இன நல்லிணக்கத்திற்கான கலை,கலாசார, மற்றும் வரவேற்பு நடன நிகழ்வுகள், இடம்பெற்றன. புனித சிசிலியா தேசிய பாடசாலை மாணவி ரவிக்குமார் ஷயனாவினால் பாஸ்காவை பிரதிபலிக்கும் ஓவியங்களும், அதிதிகளுக்கு வழங்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் கலைஞர்களுக்கு மலர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி அதிதிகளாhல் கௌரவிக்கப்பட்டனர்.
0 Comments:
Post a Comment