இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் நெசவுத் தொழிலாளர்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு.
இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மண்முனை தென் எருவில்பற்று மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.நெசவு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் "Threads for Hope" எனும் தொனிப்பொருளில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிலிருந்து 11 பயனாளிகளுக்கும், மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிலிருந்து 02 பயனாளிகளுக்கும் அவர்களது நெசவுத்தொழில் மேம்பாட்டிற்காக 150,000 ரூபா பெறுமதியான நூல்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் திருமதி அனுராதி பிரேஹரா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் த.நிர்மல்ராஜ், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் மாவட்ட உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், பயனாளிகளுடன் சந்தைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment