24 Mar 2024

மைத்திரிபால சிறிசேனவப் போல் ரஷ்யா செயற்பட்டுள்ளது – இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் தெரிவிப்பு.

SHARE

மைத்திரிபால சிறிசேனவப் போல் ரஷ்யா செயற்பட்டுள்ளதுஇராஜாங்க அமைச்சர் பிள்ளையான் தெரிவிப்பு.

ரஷ்யாவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பந்தமாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிவித்திருந்த போதிலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவப் போல் ரஷ்யா செயற்பட்டுள்ளது. நாட்டில் இவ்வாறான குண்டு வெடிப்புகள் நடக்காமல்  தடுக்க வேண்டுமானால் வரவு செலவுத் திட்டத்தில் அதிகமான நிதிகள் ஒதுக்கப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது என இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கிராமிய வீதிகள் அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட  ஒருங்கினைப்புக் குழு  தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய  ஈஸ்டர் படுகொலை இன - மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும் நூல் வெளியிட்டு விழா சனிக்கிழமை(23 திகதி மட்டக்களப்பில் இடம் பெற்றது.

இதன்போது நூலை வெளியிடடடு வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

இலங்கையில் ஈஸ்டர் படுகொலை போன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் இடம்பெறாமல் இருக்க நாம் எமது சமூகத்தை எவ்வாறு கையாள போகின்றோம் எதிர்காலத்தில் இதனை எவ்வாறு தடுப்பது, தொடர்ந்தும் அமைதியான சூழலை தக்க வைப்பது இந்த சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என நாம் சிந்திக்காமல் இருக்க முடியாது. அந்த வலியையும் வேதனையும்தான் நாம் ஆரம்பத்தில் இந்த புத்தகத்தில் சொல்லி இருக்கின் றோம்  ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் படுகொலை புத்தகம் என்பது ஒரு நல்லிணக்கமாக இருந்தால் இது ஒரு மத பிரிவினரை மாத்திரம் அல்ல கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல மதங்களும் யாரும் பெரிதென்று தங்களை மார்புதட்டகூடாது எந்த மதமும் தங்களை பெரிதாக காட்டிக் கொள்ளக்கூடாது என்பதுதான் எனது கருத்து.

தற்போது நாம் எதிர்கொள்ளும் சவால்களை மிகக் கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. சேனல் 4 வெளிநாட்டு ஊடகம் சில அரசியல்வாதிகள் எங்களை நோக்கி கை  காட்டினார்கள் சாதாரண மத பிரிவினர் இவ்வாறொரு பெரிய தாக்குதலை எவ்வாறு நடத்தினார்கள் என்ற சாத்தியத்தை  பலரது கேள்விக்கு இந்தப் புத்தகம் பதில் கூறுகின்றது. இந்தக் குண்டு வெடிப்புக்கு பின்னால் உள்ள சக்தி என்ன நோக்கம் என்ன அவர்களின் கொள்கை  இந்த புத்தகம் வெளிக்கொண்டு வருகின்றது. எமது நாட்டின் மக்களின் நிலையான சமாதானத்தோடு பொருளாதாரத்திற்காக பாடுபடுகின்ற மக்கள் என்ற அடிப்படையில் ஏனைய அரசியல் கட்சிகள் போன்று நாம் சாதாரணமாக சிந்தித்துவிட முடியாது. இந்த மக்களை வழிநடத்து கின்ற அரசாங்கமாகவே நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

எமது மண்ணிலே எங்களது கண்ணுக்கு முன்னால் குழந்தைகள் எரிந்து போனார்கள் இவ்வாறான ஒரு சம்பவங்கள் இனிமேல் இடம்பெற இருக்காமல் இருக்க நாம் அரசாங்க என்ற ரீதியிலே சிந்திக்க வேண்டியுள்ளது. மனிதனாக சிந்திக்க முடியாது இவ்வாறான  சவால்களை எவ்வாறு  முறியடிப்பது நேற்று இந்தியாவிலேயே .எஸ் .எஸ்  தலைவரே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எல்லாரும் ஒன்றுபட்டு செயற்பட்டால்தான் இவ்வாறான சம்பவங்களை தடுக்க முடியும் என நான் நினைக்கின்றேன். அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றவர்கள் என்ற ரீதியில் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டிய தேவையில் நாங்களும் இருக்கின்றோம். என அவர் இதன்போது குறிப்பிட்டார்.



SHARE

Author: verified_user

0 Comments: