26 Mar 2024

ஈஸ்ற்றர படுகொலை யாருக்காக எதக்காக அது நடத்தப்பட்டது என்ற உண்மை வெளிவர வேண்டும் -கருணாகரம் எம்.பி.

SHARE

ஈஸ்ற்றர படுகொலை யாருக்காக எதக்காக அது நடத்தப்பட்டது என்ற உண்மை வெளிவர வேண்டும் -கருணாகரம் எம்.பி.

இந்த ஈஸ்ற்றர படுகொலை யாருக்காக  எதக்காக அது நடத்தப்பட்டது என்ற உண்மை வெளிவர வேண்டும். மைத்திரிபால சிறிசேன அவர்கள் எதைக் கூறியிருக்கின்றார் என்பது இன்னும் வெளிவரவில்லை. ஆனால் அவருடைய கூற்றுக்கள் அனைத்தும் மக்களுக்கு வெளிப்படையாக கூறப்பட வேண்டும்.

என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை(26.03.2024) மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்..

ஈஸ்ற்றர் குண்டு வெடிப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளார். மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 2019 ஏப்ரலில் ஈஸ்ற்றர் குண்டு வெடிப்பு ஏற்பட்டிருந்தது.

கோட்டபாயவை ஆட்சிபீடம் கொண்டு வருவதற்காதக அவரின் கீழ்; இயங்கிய புலனாய்வுப் பிரிவினரால் திட்டமிட்டு செய்யப்பட்ட குண்டுவெடிப்பாக இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகளால் அந்தக் குண்டு வெடிப்பு தொடர்பில் பேசப்பட்டன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் முக்கிய பொறுப்பிலிருந்தவரின் கருத்துக்கள் சனல் 4 செய்தி தளத்தினூடாக கடந்த வருடம் பிரபல்யமாகியிருந்தன. தற்போது ஈஸ்ற்றர் குண்டு வெடிப்பு சம்மந்தமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையன் அவர்கள் ஒரு புத்தகம் எழுதியிருக்கின்றார். அதில் பல விடையங்கைள அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால் அவர்கள் இக்குண்டு வெடிப்பு படுகொலையாளிகளை தனக்குத் தெரியும் எனக் கூறியிருக்கின்றார். இந்த நாட்டின் அதிபராக இருந்தவர் தனக்குத் தெரிந்த விடையங்களை வெளிப்படையாகக்கூறி மனித உயிர்களைப் பரியெடுத்த அந்த சூத்திரதாரிகளை சட்டத்திற்கு மன் கொண்டு வருவதற்கு அவர் துணைபோக வேண்டும்.

அதனூடாக இந்த ஈஸ்ற்றர படுகொலை யாருக்காக  எதக்காக அது நடத்தப்பட்டது என்ற உண்மை வெளிவர வேண்டும். மைத்திரிபால சிறிசேன அவர்கள் எதைக் கூறியிருக்கின்றார் என்பது இன்னும் வெளிவரவில்லை. ஆனால் அவருடைய கூற்றுக்கள் அனைத்தும் மக்களுக்கு வெளிப்படையாக கூறப்பட வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.



 

SHARE

Author: verified_user

0 Comments: