மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு இன்று புதன்கிழமை(20.03.2024) களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அபய விக்கிரம தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உஜித் லியனகே, மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எதிரிமான், களுவாஞ்சிகுடி பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜனக்க ஜெயரெத்ன, உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் இதன்போது கலந்து கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது கலந்து கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளினால் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களின் சின்னங்கள், சீருடைகள், அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள், உள்ளிட்ட அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டன.
0 Comments:
Post a Comment