ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம் வேண்டி விசேட வழிபாடுகள்.
ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் அவருக்கு ஆசிர்வாதம் வேண்டி ஞாயிற்றுக்கிழமை(24.03.2024) விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நல்லாசி வேண்டி மட்டக்களப்பு புளியந்திவு சித்திர வேலாயுத சுவாமி தேவாலயத்தில் ஆலய பிரதம குருசிவ ஸ்ரீ பகீரத சர்மா தலைமையில் இந்த விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் மண்முனை வடக்கு பிரதேச அமைப்பாளர் சங்கரதாஸ் மகேந்திரராஜாவின் ஏற்பாட்டில் இதன்போது விசேட வழிபாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இன்றைய இந்த விசேட வழிபாட்டு நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த வலய அமைப்பாளர்கள், முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment