4 Feb 2024

இரு இராஜாங்க அமைச்சர்களும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தலையிடியாகத்தான் உள்ளார்கள் - சாணக்கியன் எம்.பி.

SHARE

இரு இராஜாங்க அமைச்சர்களும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தலையிடியாகத்தான் உள்ளார்கள் - சாணக்கியன் எம்.பி.

பல வீதகள் புனரமைப்புச் செய்யவேண்டிய தேவைகள் உள்ளன இந்நிலையில் ஏற்கனவே போடப்பட்ட கொங்கீட் வீதிகளுக்கு மேலாக கார்பட் வீதிகளைப் போடுவதாகவும் நான் அறிகின்றேன். எனவே இரு இராஜாங்க அமைச்சர்களும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தலையிடியாகத்தான் உள்ளார்கள்அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும தீர்மானங்கள் காலங்கள் கடந்த நிலையிலும் நிறைவேற்றப்படாமலுள்ளன. மக்களுக்கும் இக்கூட்டங்களில் கலந்து கொண்டு அவர்களின் கருத்துக்களை சொல்ல முடியாத சூழல்தான் உள்ளது.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை(02.02.2024) மாலை நடைபெற்ற போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இக்கூட்டங்களுக்கு ஆளும்தரப்பிலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இராஜாங்க அமைச்சர்களின் போட்டித் தன்மைகள் காரணமாக இக்கூட்டங்களில் கலந்து கொள்வதில் மக்களும், அதிகாரிகளும். நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

ஒரே நாளில் காலையிலும், மாலையிலும், இரண்டு அபிவிருத்திக்குழுக் கூழுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. அந்த இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் இம்மாவட்டத்திலுள்ள வளங்களை தங்களுக்குள்ளேயே பிரித்தெடுத்துவிட்டு, எந்தவொரு ஒருங்கிணைப்பும் இல்லாமல், இக்கூட்டங்களை நடாத்துவதனால் அதில் பங்கு கொள்ளும் அனைவரும் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது.

அபிவிருத்திக் குழுக்கூட்டங்கள் என்ற பெயரில் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அதிகாரிகளைக் கேள்வி கேட்கும் செயற்பாடுகளாகத்தான் அமைந்துள்ளன. அமைச்சர்கள் நிதியைப் பெற்றுக் கொடுத்தால்தான் அதிகாரிகளும் அவர்களது செயற்பாடுகளை முன்நெடுக்கலாம். இந்நிலையில் சில பிரதேச சபைகளில் இருக்கின்ற நிரந்தர வைப்பு பணத்தையெல்லாம் மீளப் பெற்று துஸ்பிரயோகங்களும் நடைபெறுவதாக அறிகின்றோம். பல வீதிகள் புனரமைப்புச் செய்யவேண்டிய தேவைகள் உள்ளன இந்நிலையில் ஏற்கனவே போடப்பட்ட கொங்கீட் வீதிகளுக்கு மேலாக கார்பட் வீதிகளைப் போடுவதாகவும் நான் அறிகின்றேன். எனவே இரு இராஜாங்க அமைச்சர்களும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தலையிடியாகத்தான் உள்ளார்கள்அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும தீர்மானங்கள் காலங்கள் கடந்த நிலையிலும் நிறைவேற்றப்படாமலுள்ளன. மக்களுக்கும் இக்கூட்டங்களில் கலந்து கொண்டு அவர்களின் கருத்துக்களை சொல்ல முடியாத சூழல்தான் உள்ளது.

நான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வந்தால் 4 வருடங்கள் ஆகின்றன. இந்த 4 வருடத்தில் போரதீவுப்பற்றில் 6 அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள்தான் நடைபெற்றிருக்கும். எனவே கூட்டங்களை முறையாக நடாத்த வேண்டும். இதன் பொறுப்புக்கள் பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழுக் குழு தலைவர்களிடத்தால்தான் உள்ளது.

ஜனாதிபதி அவர்களும் தேர்தலை மையப்படுத்தித்தான் அவரது செயற்பாடுகளும் முன்நெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன ஜனாதிபதி அவருக்கு வேண்டியவருக்குத்தான் நிதிகளை ஒதுக்கீடு செய்கின்றார். மாறாக அது மக்களுக்குப் பிரயோசனம் உள்ளதா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது

மட்டக்களப்பு மாநகர சபையிலே இருக்கின்ற 20 கோடிரூபா நிதியை எடுத்து கடந்த காலத்திலே செலவு செய்த கடன்களை நிவர்த்தி செய்யச் சொல்லியுள்ளதாகயும் அறிகின்றேன். அந்த நிதி ஒரு ஒப்பந்தக்காரருக்குத்தான் செல்லவுள்ளது. எனவே இதுவும் ஜனாதிபதியினுடைய தவறான செயற்பாடுதான் அதற்கும் காரணம் ஜனாதிபதி அவர்கள் அவருடன் இருக்கின்றவர்கள் எவ்வாறானவர்கள் என்றாலும் பரவாயில்லை எனக் கருதி அவர்தேர்தலிலே வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இந்நாட்டை தொடர்ந்தும் நோசமான முறையில் முன்நெடுத்துக் கொண்டு வருகின்றார்.

தற்போது பெரும்பெக வேளாண்மைச் செய்கை அறுவடை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாறாக இப்பகுதியில் இப்போகத்திற்கு 6000 பேருக்கு உரமானியம் கிடைக்கவில்லைஅறுவடை முடிந்தும் இவ்வாறு உரமானியம் கிடைக்கவில்லையாயின் மாவட்டத்திலே நிருவாகத்தில் இருக்pன்ற அமைச்சர்கள்தான் இதற்குப் பொறுக்கூறவேண்டும்.

முதலாவதாக விதைப்பு வேலைகள் ஆரப்பிப்பது மட்டக்களப்பு மாவட்டத்தில்தான். அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தின் விதைப்பு வேலைகளை பொலன்நறுவை மாவட்டத்தை மையமாகக் கொண்டுதான தீர்மானங்களை எடுக்கின்றார்கள். பொலன்நறுவை மாவட்டத்தின் விதைப்பு திகதியை வைத்துக் கொண்டுதான் நிதிய அமைச்சிலிருந்தும் நிதி ஒதுக்கீடு செய்கின்றார்கள். இதனால் விவசாயிகள் தொடர்ந்தும் கடனாளியாகத்தான் இருக்கின்றார்கள்.

இப்பகுதியில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தினாலும் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்கொண்டுள்ளார்கள் அவர்களை மதிப்பீடு செய்வதற்கு அண்மையில் திடீரென கொழும்பிலிருந்து அதிகாரிகள் வருகைதந்தார்கள். அவர்கள் 2 நாட்களில் ஒரு சில இடங்களை மாத்திரம் பார்வையிட்டு விட்டுச்சென்றார்கள் அதனை மையப்படுத்தி பாதிப்புற்ற வயல்நிலங்கள் தொடர்பில் அறிக்கை வருமாக இருந்தால் அது பொருத்தமற்றதாக அமையும்என அவர் இதன்போது தெரிவித்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: