சக்தி மாற்றீடுகளை உபயோகித்து அலுவலகத்தை சிக்கனமாக அலங்கரித்தல்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டும் “இன ஒற்றுமை, நல்லிணக்கம் சுதந்திரதினத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அமைதல்" எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலகத்தை சிக்கனமாக அலங்கரிக்கும் வகையில் பிரதேச செலயகத்திலுள்ள பிரிவுகளுக்கிளுக்கிடையே புதிய ஆக்க சிந்தனை போட்டி ஏற்பாடுசெய்து நடாத்தப்பட்டது.
இதன்போது உருவாக்கப்பட்ட ஆக்கங்கள் கழிவுப் பொருட்களை உபயோகித்து, சக்தி மாற்றீடுகளை உபயோகித்து, பசுமை வெளிப்பாடாக, சுற்றாடல் நேயமிக்கதாக அமைதல் எனும் அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது.
குறித்த புத்தாக்கங்கள் விபுலானந்த கற்கைகள் நிறுவக விரிவுரையாளர்களினால் பரிசீலிக்கப்பட்டு தரப்படுத்தப்பட்டதோடு, சுதந்திரதின வைபவத்தின் போது பிரிவுகள் பாராட்டி பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த புத்தாக்க போட்டியில் பிரதேச செலயகத்தின் சிறுவர் பெண்கள் பிரிவு முதலாம் இடத்தையும், கிராம உத்தியோகத்தர் பிரிவு இரண்டாம் இடத்திதையும், பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment