18 Feb 2024

மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு சமைத்த உணவு வழங்கிவைப்பு!!

SHARE

மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் நாற்பதுவட்டை விபுலானந்தா வித்தியாலய மாணவர்களுக்கு சமைத்த பகல் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழகத்தின் தலைவர் தொழிலதிபர் தேசபந்து எம்.செல்வராசா தலைமையில் 200 மாணவர்களுக்கும் 20 பணியாளர்களுக்கும் சமைத்த பகல் உணவு பொதியும், தண்ணீர் போத்தலும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கழகத்தின் செயலாளரும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னால் பிரதி உப வேந்தருமான வைத்திய கலாநிதி கே.கருணாகரன், கழகத்தின் 2023 - 2024 ஆண்டிற்காக முன்மொழியப்பட்டுள்ள தலைவர் ஜெகவண்ணன், கழகத்தின் உறுப்பினர் திருமதி.செல்வராசா உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டு உணவு பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.

போஷாக்கான உணவினை மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்திற்கு அமைவாக தாந்தாமலை பகுதியில் உள்ள மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டே குறித்த உணவு பொதிகள் ரோட்டரி கழகத்தின் தலைவரின் நிதி அனுசரனையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.








SHARE

Author: verified_user

0 Comments: