குரங்குகளின் தொல்லையால் இன்னலுறும் மக்கள்.
பகல் வேளையிலே கிராமங்களுக்கு கூட்டம் கூட்டமாக உட்புகும் குரங்கள் மக்கள் குடியிருப்பு வீடுகளின் மேல் தாவித் திரிவதனால் வீட்டுக் கூரைகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டு, உடைகின்றன. இதனால் மழை காலங்களில் தாம் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றோம்.
மக்கள் குடியிருப்புக்குள் அமைந்துள்ள வாழை, மா, கொய்யா, உள்ளிட்ட பயன் தரும் பயிரினங்களையும் சேதப்படுத்தி வருவதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பகலில் வேலைக்குச் சென்றுவிட்டு மாலைவேளையிலே வீடுகளுக்குத் திரும்பி வந்து பார்க்கும்போது குடிமனைகளை குரங்குகள் மிகவும் அலங்கோலமாக சேதப்படுத்தி வைத்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடையத்தில் கருத்திற் கொண்டு மக்கள் குடியிருப்புக்குள் உட்புகும் குரங்குகளைக் கட்டுப்படுத்த உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 Comments:
Post a Comment