வாழ்க்கை தொழில் வழிகாட்டல் செயலமர்வு.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசலைகளிலிருந்து இம்முறை கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் முறைசாராக் கல்விப் பகுதியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாழ்க்கை தொழில் வழிகாட்டல் செயலமர்வு களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது மிகவும் திறமை வாய்ந்த வளவாளர்களினால் பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பிப்பது எவ்வாறு, எவ்வகையான பாடங்களுக்கு எந்த பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம், பல்கலைக் கழகம் கிடைக்கப் பெறாத மாணவர்கள் எவ்வாறு பல்கலைக் கழகக் கல்லூரிகள், கல்வியற் கல்லூரிகள், உயர் தொழில் நுட்பக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பது, போன்ற பல விளக்கங்ளும், தெழிவூட்டல்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி அதிகாரிகள், வளவாளர்கள், இம்முறை கல்விப் பொதுத் தர உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கற்றல் விடையங்களோடு தமது வாழ்வை நிறுத்திவிடாமல் தொழில் ரீதியான தமது திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவைப்பாடு தற்காலத்தில் எழுந்துள்ளன. 21 ஆம் நூற்றாண்டுக்கு திறன்மிக்கவர்ளே தேவைப்படுபகின்றார்கள். பல்வேறு தொழில் துறை வேலைத்திட்டங்கள் அரச நிறுவனங்களுடாக மேற்கொள்ளப்படுகின்றன. எனவே உயர்தரப் பரீட்சையை எழுதிய மாணவர்கள் தொழில் நுட்பக் கல்லூரிகளுடாக அதனைப் பெற்றுக் கொள்ளலாம். என இதன்போது பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment