இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு யாதும்மானவள் செயலுக்க உரை.
பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மாணவர்களின் கல்வி செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், மத தலைவர்கள் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், மாவட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள் மாணவர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இந்தியாவின் தலைசிறந்த செயலுக்க விரிவுரையாளர்களில் ஒருவரான திருமதி ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கான செயலுக்க உரையினை நிகழ்த்தினார. இதன்போது பத்து மாணவர்களுக்கு கற்றலுக்குரிய சந்தேக வினாக்கள் கேட்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டன. இதன்போது கற்றலுக்குரிய உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டதோடு, சிறப்பு உரையாற்றிய ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் இதன்போது கௌரவிக்கப்பட்டார்.
இலங்கையில் உள்ள மாணவர்கள் நெருப்பில் பூத்த மலர்கள், இவர்கள் அவ்வாறான சூழ்நிலையிலும் அதிலிருந்து வெளிவந்து வெற்றியடைவார்கள் என இதன்போது ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment