போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு.
நாட்டின் 76 வது சுதந்திர தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகத்திலும் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை(04.02.2024) காலை இடம்பெற்றன.
இதன்போது சிறார்கள் தமிழர், சிங்களவர், இஸ்லாமியர் போன்றவாறு ஆடைகள் அணிந்து தேசியக் கொடிகளைக் கையில் ஏந்தியவாறு பிரதேச செயலக வாயிலிருந்து வரவேற்றப்பட்டனர்.
பின்னர் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதேச செயலாளரினால் சுதந்திர தின உரையும் நிகழ்த்தப்பட்டது.
பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில் பிரதேச செலயக உயர் அதிகாரிகள், ஏனைய உத்தியோகஸ்த்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment