தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு இணக்கமான முறையில் முடிவுக்கக் கொண்டுவரப்படும் - சிறிநேசன். மு.பா.உ
மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் திங்கட்கிழமை(12.02.2024) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
எமது கட்சிக்குள் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் சிறிநேசன் மற்றும் குகதாசன் ஆகியோருக்கு அப்பால் கட்சிக்காக நாங்கள் சிலவற்றை விட்டுக் கொடுக்க வேண்டும்.
நாங்கள் வேறு கட்சிக்குள்ளிருந்து மறி மாறி இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் வரவில்லை நாம் எமது பாரம்பரையிலிருந்து பின்பற்றி வருகின்ற இக்கட்சிதான் இது. எமக்கு இதுதொடர்பில் முதிர்ற்சியும், ஒரு நீண்டகாலப் பயணமும் இருக்கின்றது. இதனால் நாங்கள் கட்சியில் பதவிகளைக் கேட்பதில் எதுவித தவறுமில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களே! நீங்கள் எங்களது கட்சியில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றீர்கள் உங்களிடம் ஊடகவியலாளர்கள் பல கேள்விகளைக் கேட்பார்கள் அப்போது நீங்கள் உண்மையான சரியான பதில்களை சொல்கின்றபோது நானும் இவ்வாறு அடிக்கடி இவ்வாறு ஊடக சந்திப்புக்களைச் செய்யவேண்டிய நிலமை ஏற்படாது. சிலருக்கு ஊடகங்களைப் பார்க்கின்றபோது பல விடையங்களைப் பேசவேண்டும் என்ற எண்ணம் வருவதுண்டு, என்னைப் பொறுத்தவலையில் எந்த விடையங்களைப் பேசவேண்டும் என்ற கட்டுப்பாட்டோடுதான் ஊடகங்களுக்கு முன்னால் பேசுகின்றேன்.
எனவே கட்சி என்ற விடையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களும், நாங்களும் ஒன்றாகப் பயணிக்க வேண்டியவர்கள். எனவே நாம் கவனமாக ஊடகங்களுக்கு முன்னால் பேசும் நாகரீகத்தை பேணவேண்டும்.
செயலாளர் தெரிவிற்காக மீண்டும் மீண்டும் பொதுச் சபையைக் கூட்டடி வாக்காளர்களுக்கு சலிப்புத் தனமையை ஏற்படுத்துவதா? என்ற கேள்வி எழுகின்றது. எனவே பொதுச் செயலாளர் பதவிக் காலத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆதரவாளர்களிடத்தில் இருக்கின்ற காரணத்தினால் நாம் ஒற்றுமையாக முடிவெடுத்து சரியான இணக்கப்பாட்டிற்கு வருவோம். விரைவில அதனை மக்கள் அறிவார்கள்.
அண்மைக்காலமாக நான் ஊடக சந்திப்புக்ளை நிகழ்த்தக்கூடாது என நினைத்துக் கொண்டிருக்ககையில் எமது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் தம்பி இரா.சாணக்கியன் அவர்கள் சில தவறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனார் எனவே அவற்றுக்கு பதிலளிக்கக்கூடிய நிர்ப்பந்தத்திற்கு நான் உள்ளாக்கப்படுகின்றேன்.
சாணக்கியன் அவர்கள் அண்மையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் எமது கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளராக இருந்து கி.துரைராசிங்கம் அவர்களின் பதவி பறிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். 2020 நாடாளுமன்றத் தேர்தலின்போது வேட்பாளர் பட்டியல் தயாரித்தது, வாக்குகணிப்பு, தேசியபட்டியல், உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் தேர்தலுக்குப் பின்னர் அவருக்கு அளுத்தங்கள் இருந்தன. அதனால் உண்மையில் அவரது பதவி பறிக்கப்படவில்லை அவர் தாமாகவே இராஜினாமா செய்து அப்பதவியை விட்டார் என்பதுதான் உண்மை.
அண்மையில் நடைபெற்ற பொதுச்சபைக்கூட்டத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் பொதுச் செயலாளர் பதவிக்காக ஒரு முன்மொழிவை வைத்துதார் என சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது தவறான கருத்து ஏனெனில் சுமந்திரன் அவர்கள் அவருக்கு செயலாளர் பதவி தரவேண்டும் அல்லது அவரது அணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான த.கலையரசன், இரா.சாணக்கியன், அல்லது குகதாசன் ஆகியவர்களின் ஒருவருக்கு பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்படல் வேண்டும் என நான்கு பேரை முன்மொழிந்திருந்தார்.
பொதுச் செயலாளர் பதவிக்காக எனது பெயரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்தின் அவர்கள் முன்வைத்த பின்னர்தான் சுமந்திரன் தரப்பிலிருந்து இவ்வாறு அப்பதவிக்காக பல முன்மொழிவுகள் செய்யப்பட்டன. இதுதான் உண்மையான விடையாமாகும்.
பொதுச் செயலாளர் பதவிக்காலத்தை முன்காலத்தில் குகதாசன் அவர்களும், பின்காலத்தில் என்னையும் என பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள் என கட்சியின் புதிய தலைவர் என்னிடம் தெரிவித்தார். இதனை நான் வாபஸ் பெற்றதாக தெரிவிக்கும் கருத்து முற்றிலும் தவறானது.
சுதந்திரன் அவர்கள் தலைவர் பதவிக்காக போட்டியிட்டார் அதில் வெற்றி பெறவில்லை, பின்னர் செயலாளர் பதவிக்காகவும் முனைந்தார் அதுவும் கிடைக்கவில்லை, பின்னர் பொருளாளர் பதவிக்காகவும் போடியிடுவாரா என எண்ணத் தோணுகின்றது. விட்டுக்கொடுப்புடன் கௌரவமான முறையில் இவைகள் இடம்பெறும் நாம் என நினைத்தோம்.
சாணக்கியன் அவர்கள் எமது மண் பறிபோகின்றபோது, மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது தட்டிக் கேட்பவர் என நான் பல இடங்களில் சொல்லியிருக்கின்றேன். உங்களின் நல்ல விடையங்களளை ஆதரித்திருக்கின்றேன். 2018 இற்கு முன்னர் இருந்த சாணக்கியனாக இருந்திருந்தால் இவ்விடையங்களில் நான் காரசாரமாக கருத்துத் தெரிவித்திருப்பேன். எனது கருத்துக்களுக்கு பதிலளிப்பதே கஸ்ற்றமாக இருந்திருக்கும். இப்போத நீங்கள் எங்களுடைய கட்சியில் இருக்கின்றீர்கள் எனவே எங்களுக்குள் நாங்கள் மோதிக்கொள்ளும் தேவை இல்லை. என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment