மண்முனை வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்.
மண்முனை வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை (15.02.2024)
பிரதேச செயலக டேபா மண்டபத்தில் வர்த்தக இராஜாங்க அமைச்சரும் பிரதேச ஒருங்கிணைப்புக்
குழு தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தலைமையில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன்
அவர்களின் ஒழுங்கமைப்பின் கீழ் இடம்பெற்றது.
இவ்ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கிராமிய
வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சிவநேசதுரை
சந்திரகாந்தனின் பிரத்தியேக செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் பிரதேச செயலக பதவி நிலை
உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அரச, அரச
சார்பற்ற திணைக்களங்களின் தலைவர்கள், சமூக மட்ட பிரதிநிதிகள் என பலரும் கலந்து
கொண்டனர்.
இவ்ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பிரதேச செயலக பிரிவில் தற்போது நடைபெறுகின்ற
அபிவிருத்தி செயற்பாட்டுத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன்
எதிர்கால அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான முன்னேற்பாடுகளும் பரிந்துரைக்கப்பட்டன.
மேலும் பிரதேச மட்டத்திலான திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் பிரச்சினைகளும் இனங்காணப்பட்டு
அதற்கான தீர்வுகளும் முன்மொழியப்பட்டன.
0 Comments:
Post a Comment