20 Feb 2024

வவுணதீவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொதி வழங்கி வைப்பு.

SHARE

வவுணதீவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொதி வழங்கி வைப்பு.

கிழக்கு மாகாண லயன்ஸ் கழகங்களின் அனுசரனையில் உலர் உணவுப் பொதிகள்  வழங்கி வைக்கும் நிகழ்வானது மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் இன்று (19) திகதி பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில்
இடம்பெற்றது.

இந் நிகழ்வில் 6000 ரூபா பெறுமதியான அனர்த்த நிவாரண உலர் உணவுப் பொதிகள் 150 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கிழக்கு மாகாண லயன்ஸ் கழக ஆளுனர், உதவி ஆளுனர், லயன்ஸ் கழக தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.






SHARE

Author: verified_user

0 Comments: