11 Feb 2024

வாழ்வாதார நிதி உதவிகள் வழங்கி வைப்பு.

SHARE

வாழ்வாதார நிதி உதவிகள் வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய கிராம பகுதிகளில்   பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பு முகமாக வவுனதீவு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 27 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவித்திட்ட நிதி உதவிகள் வழங்கும் நிகழ்வு  வவுனதீவு பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானநந்தி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(11.02.2024) பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 4 லட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவித்திட்ட நிதிகளை  வழங்கி வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேச மக்களின்   வலுப்படுத்து முகமாக வாழ்வாதார திட்டதிற்கான பயிற்சிகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட உள்ளன. இதனை வெற்றிகரமாக முன்னெடுக்க பயனாளிகள் திறம்பட செயல்பட வேண்டும். என இந்நிகழ்வில் உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் எஸ்.நிர்மல்ராஜ், வவுனதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சபேசன்  பிரதேச  செயலக உத்தியோகஸ்த்தர்கள், பயனாளிகல்  என பலரும்  கலந்து கொண்டிருந்தனர்.














SHARE

Author: verified_user

0 Comments: