தூயகாணிக்கை அன்னை ஆலய 400வது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு 400பேருக்கு ஞானஸ்தானம் வங்கும் நிகழ்வு.
கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூயகாணிக்கை அன்னை ஆலய 400வது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் ஒரே நாளில் அதிகளவான சிறார்களுக்கு ஞானஸ்தானம் வழங்கி வைக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை(02.202.2024) மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் விசேட நவநாள் திருப்பலி ஆலயத்தின் 400வது ஆண்டு ஸ்தாபகதின விசேட திருப்பலி நிகழ்வும் தொடர்ந்து ஞானஸ்தானம்பெறும் சிறுவர்களுக்கான திருவிழா திருப்பலியும் இங்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது.
ஒரே நாளில் அதிகளவான சிறார்களுக்கு ஆலயத்தின் பங்குத்தந்தை மற்றும் மறை மாவட்ட ஆயரினால் ஞானஸ்தானம் வழங்கி வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும். ஆலயத்தின் ஒன்பது வட்டாரங்க ளிலும் உள்ள ஞானஸ்த்தானம் பெறும் 400 சிறுவர்கள் உட்பட அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment