அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைக்குமாறு அமைச்சர் பந்துல அதிகாரிகளுக்கு பணிப்பு.
அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் டீ.எஸ்.சேனநாயக சமுத்திர வான் கதவுகள் திறக்கப்பட்டதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சேதமடைந்த வீதிகள், பாலங்கள் மற்றும் கால்வாய்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப் படுத்துமாறு வீதி, நெடுஞ்சாலைகள்,ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.எம்.வீரசிங்கவின் அழைப்பின் பேரில் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகள் மற்றும் பாலங்களை பார்வையிட்டார்.
இதன்போது வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகள்,பாலங்கள் தொடர்பான சேத விபரங்களை சமர்ப்பிக்குமாறும், புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
0 Comments:
Post a Comment