ஸ்ரீ ஆண்டாள் பிருந்தாவன கிருஷ்ணர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை வழஜபாடுகள்.
அயோத்தியில் ஸ்ரீ ராம ஜென்ம பூமி திறப்பு விழா மாபெரும் நகர சங்கீர்த்தனம் நடைபெறுவதை முனிட்டு மட்டக்களப்பு தேத்தாதீவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் பிருந்தாவன கிருஷ்ணர் ஆலயத்தில் திங்கட்கிழமை(22.01.2024) சிறப்பு விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இதன்போது மூல மூர்த்திக்கும், ஏனைய பரிபாரத் தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று, ஸ்ரீ ராம தீபங்களும் பக்கதர்கள் ஏற்றப்பட்டன. ஆலய பிரதம குரு ராமானுஜன் செல்வப்பிராகாஷ் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டார்.
இதன்போது அப்பகுதியிலுள்ள கிருஷ்ண பக்தர்பகள் கலந்து கொண்டு ராமகானம் பாடி பனை வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment