24 Jan 2024

வெள்ளத்தால் பாதிப்புற்ற வேளாண்மைச் செய்கையைப் பார்வையிட மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அதிகாரிகள் குழு.

SHARE

வெள்ளத்தால் பாதிப்புற்ற வேளாண்மைச் செய்கையைப் பார்வையிட மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அதிகாரிகள் குழு.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அழிவுற்றுள்ள வேளாண்மைச் செய்கையின் பாதிப்பு நிலவரம் தொடர்பில் நேரில் பார்வையிட்டு ஆராய்ந்து விவசாயிகளையும் சந்தித்து ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் கண்டறிவதற்காக உயர் மட்ட அதிகாரிகள் குழுவொன்று தி மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ளது.

இக்குழுவில் விவசாயத்திணைக்களம், மற்றும் காப்புறுதி கூட்டுத்தாபத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்துள்ளனர்.

இக்குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் அதிகளவு வெள்ளத்தால் பாதிப்புற்ற வெல்லாவெளி பிரதேசத்திற்கு திங்கட்கிழமை (23.01.2024) நேரடி விஜயம் மேற்கொண்டு அங்கு வேளாண்மைச் செய்கை வெள்ள அனர்த்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து நேரில் பார்வையிட்டதுடன், விவசாயிகளிடமும் கேட்டறிந்து கொண்டுள்ளது.

எமது வயற்கண்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 90 வீதமாக வேளாண்மைச் செய்கை பாதிப்பட்டிருந்ததுஇது தொடர்பில் நாம் கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கு  அறிவித்திருந்தோம்அதற்கிணங்க விவசாய திணைக்களத்திலிருந்தும்காப்புறுதி சபையிலிருந்தும் அதிகாரிகள் வருகை தந்து வேளாண்மைச் செய்கையின் பாதிப்புக்கள் தொடர்பில் பார்வையிட்டுச் சென்றுள்ளார்கள்கடந்த வருடமும் நாம் எதிர்கொண்ட பாதிப்புக்களுக்கு முறையான நிவாரணம் கிடைக்கவில்லைஎனவே இம்முறை இக்குழு முழுமையாகப் பார்வையிட்டு எமக்குரிய முழு நிவாரணத்தையும் பெற்றுத் தரும் என நாம் நம்புகின்றோம்என வெல்லாவெளி ஓட்டடிமுன்மாரி வயற்கண்டத்தின் விவசாய அமைப்பின் செயலாளர் கருணைராஜன் இதன்போது தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: