களுவாஞ்சிகுடியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு.
டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழுள்ள பகுதிகளைக் கண்காணித்து டெங்கு ஒழிப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அ.உதயசூரியா அவர்களின் தலைமையில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அபயவிக்கிரம, பொதுசுகாதார பரிசோதகர்கள் பொலிசார், உள்ளிட்ட, பலரும் ஒன்றிணைந்து இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்பேது இக்குழு வீடு வீடாகச் சென்றுடெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அடையாளம் கண்டு பொதுமக்களின் உதவியுடன் அவற்றை அகற்றிவருவதுடன், தேங்கி நிற்கும் வெள்ள நீர்ரையும் வெட்டிவெளியேற்றுவதற்குரிய ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெங்கு நூளம்பு பெருகும் சூழலை வைத்திருந்தவர்ளும் இன்போது அடையாளம் காணப்பட்டு அவர்கள் எச்சரிக்கப்பட்டதுடன், ஒலிபெருக்கி மூலமும் மக்களுக்கு டெங்கு தொடர்பான அறிவுறுத்தப்பட்டு வரப்படுகின்றன.
0 Comments:
Post a Comment