மட்.புளியந்தீவு புனித மரியால் பேராலய புத்தாண்டு பிரதான நள்ளிரவு ஆரானை.
உலகமெங்கும் வாழும் கிறிஸ்தவ போது மக்கள் பிறந்துள்ள புத்தாண்டை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
புத்தாண்டுக்கான நள்ளிரவு ஆராதனைகள் நாடெங்கும் தேவாலயங்களில் சிறப்பாக நடைபெற்றன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் புத்தாண்டுக்கான நள்ளிரவு ஆராதனை பிரதான வழிபாடு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது.
கடந்த பல வருடங்களுக்குப் பின் புத்தாண்டுக்கான நள்ளிரவு ஆராதனைகள் வழிபாடுகள் இம்முறை சிறப்பாக நடைபெற்றன. மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட ஆயர் பொன்னை யோசப் தலைமையில் ஆலய பங்குத்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ் உட்பட பங்கத்தந்தைகளினால் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போது புத்தாண்டுக்கான நள்ளிரவு ஆராதனையில் நாட்டு மக்களுக்கு நல்லாசி வேண்டி திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. மேலும் புத்தாண்டை குறிக்கும் பாடல்கள் இசைக்கப்பட்டதோடு, புத்தாண்டு நல்லாசி உரைகளும், இதன்போது இடம்பெற்றன.
இப்புத்தாண்டு நள்ளிரவு ஆராதனையில் பெருமளவான கிறிஸ்தவ போது மக்கள் கலந்து கொண்டிருந்தனர். சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் இடம்பெற்ற புத்தாண்டு நள்ளிரவு ஆராதனைகள் போது ஆலய சுற்றுப்புறத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment