வெள்ளத்தால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்கள்.
ற்போது பெய்துவரும் பலத்த அடைமழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேசத்தின் எல்லை நகரில் மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்களது வீடுகளிலும் இடைத்தங்கல் முகாம்களிலும் தங்கி வருகின்றார்கள். அவர்களை நேரில் சென்று பார்வையிட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், அம்மக்களுக்குத் தேவையான வசதிகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தேவையான உலர் உணவுகள், மருத்துவ வசதிகள் போன்றவற்றை கிராமிய வீதிகள் இராஜாக அமைச்சர் சந்திரகாந்தன் ஆலோசனைக்கு அமைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பெய்துவரும் தொடர் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பல்வேறு இடங்களிலும் மக்கள் இடம் பெயர்ந்து உறவினர் மற்றும் நண்பர்களது, வீடுகளிலும், இடைத்தங்கல் முகாம்களிலும் தங்கி வருகின்றார்கள். அந்த வகையில் ஏறாவூர்பற்று பிரதேசத்தின் எல்லை நகரில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக அங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்து மாஞ்சோலை ஏறாவூர் எல்லை கிராமத்தின் மணிமண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கிருக்கிற மக்களை கிராமிய வீதிகள் இராஜாக அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனைக்கு அமைய முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் நேரடியாக சென்று பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரை யாடி அவர்களுக்கு தேவையான வசதிகள் தொடர்பிலுத் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
இந்நிலையில் அந்த மக்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள், மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இராஜாக அமைச்சர் சந்திரகாந்தன் ஆலோசனைக்கு அமைய பிரசாந்தன் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்துள்ளார்.
இதன்போது அப்பகுதி கிராம சேவை உத்தியோகத்தர் கோகுலன் ஆலய தலைவர் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment