வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடற்சியாக பெய்துவந்த அடைமழையினால் பாதிப்புற்ற போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள பெரியபோரதீவு மற்றும் பட்டாபுரம் கிராமங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வெள்ளிக்கிழமை (05.01.2024) பட்டாபுரம் கிராம சேவையாளர் காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
பூமணிம்மா அறக்கட்டளை அமைப்பின் ஊடாக பிரான்ஸ் நாட்டிலுள்ள மரியதாஸ் ஜெயந்தனின் பத்து இலட்சம் ரூபாய் நிதிப் பங்களிப்பில் மூன்றாவது கட்டமாக இந்த நிவாரணம் மட்டக்களப்பு போரதீவுப் பற்றில் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர் வ.சக்திவேல் அவர்களின் ஏற்பாட்டில் அப்பகுதி கிராமசேவை உத்தியோகஸ்த்தர் ஜே.முத்துலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் எஸ்.இரங்கநாதன், பிரதித்திட்டப் பணிப்பாளர் எஸ்.சசிகுமார், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் ஆ.வேலாயுதம்; மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
வடகீழ் பருவப் பெயற்சி மழை தற்போது சற்று ஓய்ந்துள்ள நிலையிலும் மக்கள் குடியிருப்புக்களில் தொடர்ந்து வெள்ள நிலமையே காணப்படுகின்றது. இந்த இக்கட்டான காலநிலையில் காலடிக்குத் தேடிவந்து உதவிய பூமணிம்மா அறக்கட்டளை அமைப்பு, பிரான்ஸ் நாட்டிலுள்ள மரியதாஸ் ஜெயந்தன், மற்றும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் மற்றும் பூமணிஅம்மா அறக்கட்டளையின் -நிறுவனத் தலைவர் விசு செல்வராஜாவுக்கும், அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளுக்கும் இலங்கை ஆகிய அப்பகுதி மக்கள் தமது உளமார்ந்த நன்றியை இதன்போது தெரிவித்தனர். பூமணி அம்மா அறக்கட்டளையினர். புது வருடத்திலிருந்து தொடர்ச்சியாக தினமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று ம மலையகம் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் உலர் உணவுகளை வழங்கி வருகின்றனர்.
0 Comments:
Post a Comment