இலங்கையின் சுதந்திர தினம், தமிழர்களுக்கு கரிநாள்- கவனயீர்ப்பு பேரணிக்கான அழைப்பு.
இலங்கையின் சுதந்திர தினம், தமிழர்களுக்கு கரிநாள்- கவனயீர்ப்பு பேரணிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கம் சார்பாக அச்சங்கத்தைச் சேர்ந்த திருமதி. ஆமலநாயகி அமல்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்… தமிழ்த்தேசிய பற்றாளர்களே!
எதிர்வரும் மாசி (பெப்ரவரி) 4ம் திகதி, இலங்கை அரசாங்கம் தனது 75 வது சுதந்திர தினத்தினை கொண்டாடுகின்றது.
இலங்கையின் ஆட்சியானது, காலனித்துவ ஆட்சியால், 1948 மாசி 4ஆம் திகதி சிங்கள ஆதிக்க அரசியல்வாதிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டதில் இருந்து தமிழர்கள் மற்றுமொரு சிங்கள ஆதிக்க சக்தியின் கீழ் அடிமையாக்கப்பட்டுள்ளார்கள்.
இலங்கையில் தமிழர்கள் தொடற்ச்சியாக கொலை செய்யப்பட்டார்கள், தமிழர்களின் நிலங்கள் தொடற்சியாக ஆக்கிரமிக்கப்படுகின்றன. தமிழர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டதுடன், அவர்களை தேடி நீதி கோரும் அவர்களது உறவுகளும் சமூகச் செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும் மட்டுமல்ல தமிழ் அரசியல் தலைவர்களும், நீதிபதிகளும் கூட அச்சுறுத்தப்படுகின்றனர், தாக்கப்படுகின்றனர், உள்நாட்டில் நீதி மறுக்கப்பட்டது.
எமது உறவுகளை தேடும் உரிமை, வாழும் உரிமை, பேசும் உரிமை, வளங்களை அனுபவிக்கும் உரிமை. நீதி கோரும் உரிமை என்பன பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் போன்றவற்றின் ஊடாகவும் இராணுவம், மகாவலி குடியேற்ற திட்டம் வன வள திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் என்பவற்றால் பறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அடிமையாக வாழும் தமிழ் மக்கள், இலங்கையின் சுதந்திர தினத்தினை கரிநாளாக அனுஸ்டித்துவருகினறோம்.
எதிர்வரும் 04 பெப்ரவரி 2024 அன்று காலை 10.00 மணியளவில் கல்லடிப்பாலத்திலிருந்து காந்திப்பூங்காவரை கவனயீர்ப்பு பேரணி ஒன்றை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளோம். இப்பேரணியில் கலந்து கொண்டு தமிழரின் அபிலாசைகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துவோம் அனைவரும் வாரீர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment