தைப்பொங்கல் பண்டிகையை இந்துக்கள் கொண்டாடவுள்ள இந்நிலையில் வர்த்தக நிலைங்கள் மற்றும் பொதுச் சந்தைகள் போன்றன களைகட்டியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் மக்கள் பொருட் கொள்வனவு செய்வதில் மும்முரம் காட்டி வருவதையும் காணமுடிகின்றது. இந்நிலையில் மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு, களுதாவளை, கல்லாறு உள்ளிட்ட பல பகுதிகளிலும் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்து வருகின்றனர்.
புத்தாடைகள், பட்டாசு, பொங்கலுக்குரிய பொருட்கள், பானைகள், உள்ளிட்ட பல பொருட்களைக் கொள்வனவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பொருட்களுக்கு அதிகவிலையேற்றம் காரணமாக, கடந்த வருடத்தை விட மக்கள் அதிகளவு பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபாடு காட்டுவது குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மரக்கறிகளின் விலைகளும் வெகுவாக உயர்ந்துள்ளதாகவும். மக்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மரக்கறிகளைக் கொள்வனவு செய்வதாக களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை மரக்கறி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment