போரதீவுப்பற்று பிரதேசசெயலகத்தில் இலக்கிய விழாவும் புத்தகக் கண்காட்சியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் இலக்கிய விழாவும் புத்தகக் கண்காட்சி போரதீவுப்பற்று கலாச்சார மத்திய நிலையத்தில் கலாச்சார பாரம்பரிய முறையில் மிகவும் ஞாயிற்றுக்கிழமை(31.12.203)சிறப்புற நடைபெற்றது.
பிரதேச செயலகத்தின் இந்துகலாச்சார பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது அறநெறி பாடசாலை மாணவர்கள் கலைநிகழ்வுகள் மற்றும் பேச்சுக்கள், என்பன மேடையேற்றப்பட்டதுடன், இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகளும், வழங்கி வைக்கப்பட்டனர்.
இதன்போது போரதீவுப் பற்று பிரதேச உதவி பிரதேச செயலாளர் துலாஞ்சன் நிர்வாக உத்தியோகத்தர் உமாபதி மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆலையங்களின் அறங்காவரல் சபையினர் அறநெறிப் பாடசபலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment