25 Jan 2024

தேற்றாத்தீவில் நடைபெற்ற பாரம்பரிய முறைப்படி புரிரெடுக்கும் நிகழ்வு.

SHARE

தேற்றாத்தீவில் நடைபெற்ற பாரம்பரிய முறைப்படி புரிரெடுக்கும் நிகழ்வு.

தமிழர்களின் பாரம்பரிய நடைமுறையாக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் புதிரெடுத்தல் நிகழ்வு இன்றயத்தினம் தைப் பூச நன்நாளில் நடைபெற்றது. அந்த வகையில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச் சந்தி ஆலயத்தில் இன்றயதினம் புதிரெடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

ஆலய பரிபாலனசபைத் தலைவர் .விமலானந்தராசா அவர்களில் தலைமையில் அலய பிரதம  சிவஸ்ரீ குரு சு.கு.விநாயகமூர்த்திக் குருக்கள் தலைமைகள் கிரியைகள், பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

முதலில் மூலமூர்த்தியாகிய கொம்புச் சந்திப் பிள்ளையாருக்கு பூஜைவழிபாடுகள் இடம்பெற்று, பின்னர் தேத்தாதீவு வயற்கண்டத்தில் பாரம்பரிய முறைப்படி அறிவாள் கொண்டு நெல் அறுவடை செய்து பின்னர் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு ஆலய முன்றலில் வைத்து அறுவடைப் பாடல் பாடி உப்பட்டி அடித்து பின்னர் நெல் குற்றி ஆலயத்தில் சுவாமிக்கு நைவேத்திங்கள் செய்து வழிபாடுகள் இடம்பெற்றன.

இந்நிலையில் வயலிலே அறுவடை செய்து வந்த நெற்கதிர்களை ஆலய பிரதம குரு பொது மக்களுக்கு ஆலயத்திலே வைத்து புதிர் வழங்கினார்.

இதேவைளை ஆலயத்தில் தைப் பூச நாளை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் இடம்பெற்றதோடு, சிறார்களின் நெல்அறுவடை வசந்தன் கூத்தும் இடம்பெற்றது.





















 

SHARE

Author: verified_user

0 Comments: