தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தால், 28 ஆம் திகதி கட்சியின் மாநாடு நடைபெற்றிருக்க வேண்டும்.
இங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதனை கட்சியிலுள்ள அனைவரும் ஏற்றுக் கொண்டிருந்தால் நிச்சயமாக 204.01.28 ஆம் திகதி எமது கட்சியின் மாநாடு நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் பொதுச் செயலாளர் தெரிவில் தமக்கு இணக்கமில்லை என கட்சியிலுள்ள பலர் சுட்டிக் காட்டியிருந்தார்கள். இதனை எமது கட்சியின் புதிய தலைவரிடமும் பழைய தலைவரிடமும் கட்சியின் உறுப்பினர்கள் அறிவித்திருந்தார்கள்.என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பொதுச் செயலாளருக்காக போட்டியிட்டவருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் ஞாயிற்றுக் கிழமை(28.01.24) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்.
பொதுச் செயலாளர் தெரிவின்போது வாக்களிப்புக்கு அழைக்கப்படாதவர்கள், அங்கு உணவு பரிமாறியவர்கள் உள்ளிட்டோரும் இருந்துள்ளார்கள். ஆகவே அந்த வாக்கழிப்பு உண்மையிலேயே ஏற்றுக் கொள்ள முடியாதிருந்தது. எனவே மீண்டும் பொதுச் சபையின் வாக்கெடுப்பின் மூலமாகத்தான் பொதுச் செயலாளர் பதவிக்குரிய நபரைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதை நாம் மிகவும் ஆணித்தரமாக கூறியுள்ளோம்.
திருகோணமலையைச் சேர்ந்த குகதாசன் அவர்கள் திருகோணமலையில் கட்சிக்குரிய தலைமைக் காரியாயலம் ஒன்றை அமைப்பதற்கு முன்வந்துள்ளார் அவருக்கு ஒரு வருட காலத்திக்கு பொதுச் செயலாளர் பதவியை வழங்குவோமா என எமது கட்சியின் தலைவர் சிறிதரன் அவர்கள் என்னிடம் வந்து கேட்டார் அப்போது நான் மற்றவர்களிடமும் அபிப்பிராயத்தை கேட்டு விட்டு அதற்காக ஒத்துக் கொண்டது உண்மை ஆனால் எமது அதரவாளர்கள் எமது ஆதரவாளர்கள் நூற்றுக் நூறு வீதம் எதிர்த்ததனால் நான் ஒருவருடம் விட்டுக் கொடுப்பதற்கு தயார் என்ற கருத்தை மீறப்பெற்று விட்டு தேர்தலுக்குத் தாயார் என நான் தெரிவித்திருந்தேன். இதனை பழைய தலைவர், புதிய தலைவர், சுமந்திரன் உள்ளிட்டோரிடம் தெரிவித்தேன். ஆனால் வாக்களித்தால் எனக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்பதை அவர்கள் அறிந்து கொண்டவர்கள் அங்கு வாக்களிப்பதற்குரிய சந்தர்ப்பத்தை அளித்திருக்க வில்லை.
முன்னதாக மட்டக்களப்பில் எமது கட்சியின் மாட்டக் கிளைக் கூட்டம் நடைபெற்றது. அதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் எனது பெயரை(ஞா.சிறிநேசன்) முன்மொழிந்து அவரை பொதுச் செயலாளர் பதவிக்கு நாம் தேர்வு செய்வோம் எனக் கூறியிருந்தார். அதன்போது அங்கிருந்த எமது பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்கள் சற்று உணற்சிவசப்பட்டு அரியநேத்திரன் அவர்களின் கருத்தை மாட்டக்கிளையின் கருத்தாக கருதக்கூடாது எனவும், தன்னிடமும் செயலாளராக போட்டியிடுவதற்குரிய விண்ணப்பங்களை சிலர் தந்துள்ளதாகவும், அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மாவட்டக்கிடையில் இவ்விடையம் தொடர்பாக தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டிருக்கவில்லை.
பின்னர் தொலைபேசி மூலமும், தகவல் மூலமும் பா.உ.இரா.சாணக்கியன் அவர்களுக்கு செயலாளர் தெரிவு தொடர்பாக தெரிவித்திருந்தேன், அவர் அதுதொடர்பில் எனக்கு உரிய பதிலழித்திக்கவில்லை. பின்ன திருகோணமலைக்கு மத்திய குழு கூட்டத்திற்குச் சென்றபோது அங்கு ஓர் மறைமுக நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையில் செயற்பாடுகள் நடைபெறுவதை அவதானித்தோம். அங்கும் பதவிநிலைகளுக்குரிய ஆலோசனைகளை முன்வைக்குமாறு தலைவர் மாவை.சேனாதிராஜா தெரிவித்தார். அங்கும் எனபது பெயர் செயலாளர் பதவிக்கா பரிந்துரைக்கப்பட்டது. அப்போது வடமாகாணத்தைச் சேர்ந்த குலநாயகம், பா.உ எம்.ஏ.சுமந்திரன், ஆகியோரும் எழுந்து பொதுச் செயலாளர் பதவியை அவர்களுக்குத் தருமாறு கேட்டனர்.
கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிட்ட சுமந்திரன், மற்றும் சிறிதரன் ஆகிய இருவரும் கிழக்கு மாகாணத்திற்கு அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்திக்கு பொதுச் செயலாளர் பதவி தருவதாக கட்சிக்குள்ளேயே பிரசாரம் செய்தார்கள். தற்போது அதனை மறந்து வடமாகாணத்திகே அதனையும் கோரிநிற்கின்றார்கள். சரி அவ்வாறு கேட்பதற்குரிய உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. என்றாலும் மூன்றாவது நபராக இரட்ணவேல் என்பவர் எழுந்து வடமாகாணத்தைச் சேர்ந்தவர் தலைவராக இருக்கின்ற காரணத்தால் கிழக்கைச் சேர்ந்த ஒருவர்தான் செயலாளராக வரவேண்டும் அதுவும் பா.உ.சாணக்கியன் வரவேண்டும் என்கிறார். பின்னர் பா.உ.சுமந்திரன் எழுந்து கூறுகின்றார் சிறிதரன் அணியைச் சேர்ந்தவர் பொதுச் செயலாளராக வரக்கூடாது தனது அணியைச் சேர்ந்த ஒருவர்தான் வரவேண்டும் என கூறுகின்றார். இவ்வாறு முரண்பாடுகளாகவே இந்த பொதுச் செயலாளர் பதவிக்குரிய தெரிவுக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றன.
நான் 17 வயதில் அதாவது வாக்குரிமை இல்லாத காலத்திலிருந்து இந்த கட்சி அரசியலில் பயணித்து வருகின்றோம். என்தை சிரேஸ்ட நிலையிலுள்ள பா.உ சாணக்கியன் அவர்கள் சித்தித்து செயற்பட்டிருக்க வேண்டும்.
அம்பாறையைச் சேர்ந்த பா.உ கலையரசன், அல்லது மட்டக்களப்பைச் சேர்ந்த பா.உ சாணக்கியன் அல்லது திருகோணமலையைச் சேர்ந்த குகதாஸ் அவர்களை பொதுச் செயலாளராக தேர்வு செய்ய வேண்டும் என பா.உ சுமந்திரன் தெரிவித்தார். சிறிய விடையத்திற்கு பலபேர் போட்டியிட்டார்கள்.
இவ்வாறான நிலையில்தான் கடந்த 27 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் மத்திய குழுக் கூட்டமும், பொதுச்சபைக் கூட்டமும் நடைபெற்றது. எனவே இங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதனை கட்சியிலுள்ள அனைவரும் ஏற்றுக் கொண்டிருந்தால் நிச்சயமாக 204.01.28 ஆம் திகதி எமது கட்சியின் மாநாடு நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் பொதுச் செயலாளர் தெரிவில் தமக்கு இணக்கமில்லை என கட்சியிலுள்ள பலர் சுட்டிக் காட்டியிருந்தார்கள். இதனை எமது கட்சியின் புதிய தலைவரிடமும் பழைய தலைவரிடமும் கட்சியின் உறுப்பினர்கள் அறிவித்திருந்தார்கள். என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment