15 Dec 2023

ஐ.நா சபையின் பிரதிநிதி மார்க் அன்ரே பிரன்சி இற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு.

SHARE

கிழக்கிற்கு விசேட விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ரே பிரன்சி (Marc-André Franche) இற்கும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா ஆகியோருக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று வியாழக்கிழமை பகல் திருகோணமலை நகரில் இடம்பெற்றது.

முஸ்லிம் சமூகத்தின் சவால்கள் சமகால பிரச்சனைகள் தொடர்பிலும்  மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள், மாவட்ட முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் , துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மெளலானா அவர்களால் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியின்  கவனத்திற்கு விளக்கமளிக்கப்பட்டது.






SHARE

Author: verified_user

0 Comments: