(அஸ்ஹர் இப்றாஹிம்)
மது போதையில் இளைஞரொருவர் வீதியால் சென்ற யானையிடம் சேஸ்டை செய்ததில் அவரை காலால் உதைத்து தள்ளியதில் பலத்த காயங்களுகுள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது முன்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தால் சிகிச்சையளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட" அக்போ" என்றழைக்கப்படும் யானை உணவு தேடி திரப்பனே பிரதேசத்தைச் சேர்ந்த கணுமுல்லேகம வாவியை அண்டிய பிரதேசத்தில் வீதியால் சென்று கொண்டிருக்கும் போது , மது போதையிலிருந்த இளைஞரொருவர் யானையில் கீழால் புகுந்து விளையாடி ,அதன் தும்பிக்கையையும் பிடித்துள்ளார்.இறுதியில் பிரதேசவாசிகள் இவ் இளைஞனை பலமுறை எச்சரித்தும் அதனையும் பொருட்படுத்தாது பின்புறமாக அதன் வாலைப்பிடித்து முமுதுகில் ஏற எத்தனித்த போது தனது பின் காலால் இளைஞனை தாக்கியதில் தூர வீசப்பட்டதில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ReplyForward |
0 Comments:
Post a Comment