மாணவர்களுக்கு பாதணிகளுக்கான வவுச்சர் வழங்கி வைப்பு.
கல்வி அமைச்சினால் வடக்கு வாகரை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மட்.வாகரை மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாதணிகளுக்கான வவுச்சர் வழங்கி வைக்கும் நிகழ்வு.
கல்வி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளுக்கான வவுச்சர் வழங்கி வைக்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வாகரை மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வவுச்சர் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ரமேஷ்ராஜா தலைமையில் தலைமையில் வெள்ளிக்கிழமை(22.12.2023) இடம்பெற்றது.
இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் பூபாலபிள்ளை பிரசாந்தன் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் அனந்தரூபன், பிரதிக்கல்விப் பணிப்பாளர் யோகானந்தமூர்த்தி, பாடசாலை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment