இலங்கை நம்பிக்கை பங்காளர் அமைப்பின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ் கலைவிழா ஜிந்துப்பிட்டி நீதிராஜா மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை இல்லந்தோறும் நற்செய்தியின் பணிப்பாளர் அருட்திரு சி.எஸ்.தேவபாலசிங்கம், கெளரவ அதிதியாக இலங்கை நம்பிக்கை பங்காளர் அமைப்பின் தலைவர் நோயல் அபிலாசன், மெதடிஸ்ட் ஆலயத்தின் அருட் சகோதரி தாமர பெரேரா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடக இணைப்பாளர் தேவதாஸ் சவரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
லங்கா ஹோப் நிறுவன எக்கடமிக் சிறுவர் பாடசாலை மாணவர்களின் சிறப்பு நத்தார் கலைவிழா நிகழ்வும் ஏசு கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றி சிறுவர்களின் நாடகங்களும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பிரதம அதிதி இலங்கை இல்லந்தோறும் நற்செய்தியின் பணிப்பாளர் அருட்திரு சி.எஸ்.தேவபாலசிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடக இணைப்பாளர் தேவதாஸ் சவரிமுத்து ஆகியோர்கள் உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment