மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை. மாகாண சபை தொடர்பான இருகூட்டங்களில் மஹிந்த தெரிவிப்பு.
ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் மற்றும் people’s foundation ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து எமது உரிமைகள் எமது வளங்களை பாதுகாக்க எமது மாகாணத்தின் மாகாணசபையை வலுப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளிலான செயலமர்வொன்று வியாழக்கிழமை (21.12.2023) கண்டி வரையறுக்கப்பட்ட கூட்டுறவு அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றதுடன் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ராஜா உஸ்வெட கெய்யாவ, ஜனநாயக இளைஞர் காங்கிரசின் தலைவர் கே. அர்ஜூன, pநழிடநள கழரனெயவழைn நிறுவனத்தின் தலைவர் எரிக் ஹேரத் உள்ளிட்ட கண்டி மாவட்டத்தின் சிவிலமைப்புக்கள் உட்பட இளைஞர் யுவதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவிக்கையில்.. ஜனநாயக நாடு என்ற டிப்படையில் மாகாணசபை அவசியம் எனவும் மாகாணசபை இந்நாட்டுக்கு அவசியமில்லை என யாராவது குறிப்பிடுவார்களாயின் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை தேவையும் இல்லை. தற்போது மாகாண சபை மக்கள் கூட்டிணைப்பற்ற அரச அதிகாரிகளால் செயற்படுத்தப்படுகின்றது. இதனால் மாகாணசபை குறித்தான கேள்வியொன்றை எழுப்பும்போது அரச அதிகாரிகள் அதற்கு நேரடியாக பொறுப்பேற்காமல் இருப்பதுடன் மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் இந்நிலை மாற்றமடைந்திருக்கும்.
தற்போது மாகாண சபை செயற்றிட்டங்களில் மக்கள் கருத்துக்களை கேட்டறிய வாய்ப்பு இல்லை. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை தெரிவு செய்தலை உடன் மேற்கொள்ள வேண்டும். அனேகமானோர் மாகாண சபை வெள்ளை யானை என தெரிவித்து வருகின்றனர். மாகாணசபை உறுப்பினர்களை பராமரிக்க அதிக நிதி வீண்டிக்கப்படுவதாக கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். அவர்களின் பராமரிப்புக்கு அரச வருமானத்தில் ஒரு வீதமளவே செலவாகுவாகின்றது. என அவர் இதன்போது தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தின் இரண்டாம் அமர்வு வெள்ளிக்கிழமை(22) குருணாகல் மாவட்டத்தை ஒட்டியதாக வடமேல் மாகாண விவசாய அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தின்போதும் மஹிந்த தேசப்பிரிய கலந்து கொண்டு இக்கருத்தை வலியுறுத்தி உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment