சித்த வைத்தியர் விஸ்வலிங்கம் அவர்கள் எழுதிய வீட்டு வைத்தியம், வாஸ்து சாஸ்த்திரம் ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா.
கிழக்கு இந்து ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் கலைச்சுடர் கதிர் பாரதிதாசன் தலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன், இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தின் வருகைதரு விரிவுரையாளர் சைவப் புலவர் திருமதி ராதா ஞானரெத்தினம், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது வெளியீட்டு வைக்கப்பட்ட “வீட்டு வைத்தியம்” என்ற நூலின் நயவுரையை சித்த வைத்தியர் ஜீவராசாவும், “வாஸ்து சாஸ்த்திரம்” எனும் நூலின் நயவுரையை கிழக்கு இந்து ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் கலைச்சுடர் கதிர் பாரதிதாசன் கதிர் பாரதிதாசன், அவர்களும் நிகழ்த்தினர்.
நூல்களின் முதற் பிரதியை குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீசெல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ நவரெத்தின முரசொழிமாறன் குருக்கள் நூலாசிரியரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
சிதத் வைத்தியத்துறையில் மட்டக்களப்பில் மிக நீண்ட காலமாகவிருந்து மக்களுக்குச் சேவை செய்துவரும் சித்த வைத்தியர் கணபதிப்பிள்ளை விஸ்வலிங்கம் இதுவரையில் சித்த வைத்தியத் துறையில் 11 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். என்பதோடு குருக்கள்மடத்தில் அமைந்துள்ள அவரது வீட்டு வளாகத்தில் முகிலிகைத் தோட்டம் ஒன்றையும் மேற்கொண்டு வருகின்றார்ன் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment