மட்டக்களப்பில் நிருவாக பயங்கரவாதம் இடம்பெறுகின்றதென்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒற்றுiமாக வாழும் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிப்பதற்கு கால்கோளிட்டவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவெடுத்த பிற்பாடுதான் என்பதை மறுதலிக்க முடியாது. தனியான கல்வி வலயம், மின்சாரசபை, போக்குவரத்து உள்ளிட்ட பலவற்றையும் அவர்களது குறுகிய நிலப்பரப்புக்குள் கொண்டு சென்றது உட்பட நிலத்தை துண்டாக்கி தமிழர்களையும், முஸ்லிம்களையும், தொடர்ந்தும் எதிரிகள் போன்று பார்க்கும் சூழலை உருவாக்கியதும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் காரணமாகும்.
மட்டக்களப்பிலிருந்கின்ற விடையங்களை ரவூவ் ஹக்கீம் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார். இம்மாவட்டத்திலிருக்கின்ற அரச அதிகாரிகள் நிருவாகப் பயங்கரவாதம் மேற்கொள்வது என்ற கருத்தை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். மாவட்டத்திலுள்ள அதிகாரிகள் இனம், மதம், மொழி, பேதங்களைக் கடந்து மிகவும் அற்பணிப்புடன் சேவையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறெனில் அவர் யார் இவ்வாறு செயற்படுகின்றார்கள் என்பதை ரவூவ் ஹக்கீம் அவர்கள் குறிப்பாக சுட்டிக்காட்ட வேண்டும்.
மறுமுனையை நோக்கினால் தமிழர்களுக்கு எதிரான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு, நிருவாக் பங்கீடு, உள்ளிட்ட, அடக்கு முறைகளையும், மேற்கொண்டது, கடந்த மாகாண சபை ஆட்சியிலிருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் இச்செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை ஒருதலைப் பட்சமாக காதலித்துக் கொண்டிருக்கின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி, அவர்களுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாணசபையை தாரை வார்த்துக் கொடுத்தது இந்த தமிழரசுக் கட்சிதான். அதன் காரணமாக மாகாணசபை அதிகாரங்களை தமிழர்கள் நுகர முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது. தற்போது மாகாணசபை செயற்படாமலிருப்பதற்கும் அவர்களே வித்திட்டார்கள்.
இந்நிலையில் தமிழரசுக் கட்சி ஒன்றை விளங்கி கொள்ள வேண்டும் குறிப்பாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கணக்காளரை நியமிப்பதற்கு தடையாக இருந்து அரசியல் ரீதியான பணங்கரவாதத்தை செய்து கொண்டிருப்பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இச்சந்தர்ப்பத்தில் யார் நிருவாக மற்றும் அரசியல் பயங்கரவாதத்தை மேற்கொள்கின்றார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இச்சந்தர்ப்பத்தில் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களும், சதாசிவம் வியாழேந்திரன் அவர்களும், அரசுடன் இணைந்து அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்று கிழக்கில் அபிவிருத்திகளை முன்னெடுக்கும்போது அதனைப் பொறுத்துக் கொள்ளாதவர்கள் இவ்வாறு சதந்திரமாக பணியாற்றும் அரச அதிகாரிகள் மீது பயங்கரவாத முத்திரை குத்துவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களையும், முஸ்லிம்களையும் மோதவிட்டு அதில் குளிர்காய்ந்து அரியாசனம் செல்கின்ற மிகமோசமான வற்குரோத்து அரசியலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைவிடவேண்டும் என அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment