மட்டக்களப்பு வின்சன் தேசிய பாடசாலையில் நடைபெற்ற ஒளிவிழா விழா.
மட்டக்களப்பு வின்சன் தேசிய பாடசாலையில் இயேசு பாலகனின் பிறப்பைக் குறிக்கும் ஒளிவிழா நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் மழை சற்று ஓய்ந்துள்ள இந்நிலைக்கு மத்தியில் இயேசு பாலகனின் பிறப்பை குறிக்கும் ஒளிவிழா நிகழ்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வின்சன் தேசிய பாடசாலை அதிபர் திருமதி தவத்திருமகள் உதயகுமார் தலைமையில் ஒளிவிழா நிகழ்வு வியாழக்கிழமை (21.12.2023) இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு புளியந்தீவு மெதடித்த தேவாலய பங்குத்தந்தை பி.சாய் சுதர்சன் ஆண்டகை கலந்துகொண்டு இயேசு பாலனை குறிக்கும் உரையாற்றினார். இந்நிகழ்வில் இயேசு பாலகனின் பிறப்பை குறிக்கும் கலை கலாச்சார நிகழ்வுகளில் சீறப்பு திறமைகளை காட்டிய மாணவர்களுக்கு அதிதிகளால் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் மட்டக்களப்பு கல்வி வலய உயர் அதிகாரிகள் பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலை மாணவர்கள பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த ஒளி விழா நிகழ்வில் இயேசு பாலகனின் பிறப்பைக் குறிக்கும் கரோல் கீதங்கள் தனி நடனம், கதை, நடனம் என பலதரப்பட்ட கலாச்சார நிகழ்வுகளும் அலங்கரிக்கப்பட்டதுடன், மாணவர் மத்தியில் கைபேசி பாவனையால் வரும் அனர்த்தங்கள் பற்றிய. விழிப்புணர்வு நாடகமும் இதன்போது ஆற்றுகை செய்யப்பட்டன.
மேலும் இதன்போது கிறிஸ்மஸ் அலங்கார மரமும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், பாடசாலை மாணவர்களின் கிறிஸ்மஸ் கரோல் கீதங்களும் இடம் பெற்றன. கிறிஸ்மஸ் இயேசு பாலகனின் பிறப்பை குறிக்கும் முகமாக மாணவர்கள் இதன்போது ஆடிப்பாடி ஏசு பாலகனின் பிறப்பை கொண்டாடியமை விசேட அம்சமாகும்.
0 Comments:
Post a Comment