மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கதிரவெளி அரும்புகள் குழந்தை நேயப் பாடசாலைக்கு தன்னார்வ தொண்டர் அமைப்பான வன்னிஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தால் பல்வேறு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.எரி.முஹமட் பாரீஸ் தெரிவித்துள்ளார் தெரிவித்தார்.
குறித்த குழந்தை நேயப் பாடசாலைக்கு மலசலகூடம் கட்டிக் கொடுக்கப்பட்டு, குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்புக்களும், ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதோடு பாடசாலைக் கட்டடத்திற்கு வர்ணப் பூச்சு செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டும் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட உதவித்திட்டங்களை குழந்தை நேயப் பாடசாலை நிருவாகத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வில் வன்னிஹோப் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.ரி.முஹமட் பாரீஸ், மற்றும் நிறுவனத்தின் இணைப்பாளர்கள், பெற்றோர்கள்;, மாணவர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதற்குரிய நிதி உதவியை வன்னிஹோப் நிறுவனத்தினூடாக அவுஸ்ரேலியாவிலுள்ள டொக்டர் பத்தமநாதன் றஞ்சன் அவர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment