25 Dec 2023

சிறந்த கல்விதான் சமுதாய மாற்றத்தின் அடிப்படையாக இருக்கின்றது. இளைஞர் அபிவிருத்தி அகம் இணைப்பாளர் திலீப்குமார்.

SHARE

சிறந்த கல்விதான் சமுதாய மாற்றத்தின்  அடிப்படையாக இருக்கின்றது. இளைஞர் அபிவிருத்தி அகம் இணைப்பாளர் திலீப்குமார்.

சிறந்த  கல்விதான் சமுதாய மாற்றத்தின் திறவு கோலாக இருக்கின்றது. சிறந்த கல்வியை அடிப்படையாகக் கொண்டு  வளமான எதிர்காலத்திற்கு வழிவகுக்க  முடியும்;. கல்விக்கூடாகவே அனைத்து விதமான அபிவிருத்திகளையும் அடைந்து கொள்ள முடியும் என இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா  திலீப்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்புவவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலத்தில் கற்கும் வறிய நிலையிலுள்ள மாணவர்கள் 200 பேருக்கு கற்றல் உபகரங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

பாடசாலை அதிபர் என். கதிராமத்தம்பி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய திலீப்குமார்,

நலிவுற்ற மக்களுடைய சமூக பொருளாதார அபிவிருத்திக்காக இவ்வாறான உதவிகள் வழங்கப்படுகின்றன.

இந்தப் பிரதேச மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கு உதவும் முகமாக பாடசாலைச் சமூகத்தின் வேண்கோளுக்கமைவாக விஷேட அனுமதியுடன் இந்த கற்றல் உபகரணங்களை வழங்கத் தீர்மானித்தோம்.

எதிர்காலத் தலைவர்களான இன்றைய சிறார்களின் கல்விக்கு  உதவுவதன் மூலம்  வளமான அபிவிருத்தி எனும்  இலக்கை அடைந்து கொள்ளலாம் என இளைஞர் அபிவிருத்தி அகம் எதிர்பார்க்கின்றது. இந்தப் பாடசாலைச் சமூகமும் பெற்றோரும் வளப்பங்கீடுகளை ஒருங்கிணைந்து பெற்றுக் கொண்டு சமூக பொருளாதார அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்க வேண்டும்.

அதேவேளை, சுற்றுச் சூழலையும் பாதுகாத்துக் கொண்டு கிடைக்கக் கூடிய இயற்கை வளங்களைப் பயன்படுத்தி நீடித்து நிலைக்கக் கூடிய அபிவிருத்திக்கு இளைஞர் அபிவிருத்தி அகம் எதிர்காலத்திலும் இந்த சமூகத்துடன் இணைந்து பணியாற்றச் சித்தமாக இருக்கின்றது.

ஆக்கபூர்வமாபான அபிவிருத்திகளுக்கு ஆதரவு வழங்குவோம் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் உறுதியளிக்கின்றேன்.

வீ எபெக்ற் நிதியளிப்பு நிறுவனம் கூட்டுறவு அணுகுமுறையினூடாக  இலங்கையின் 14 மாவட்டங்களில் சமூக பொருளாதார அபிவிருத்திச்  அமுல்படுத்தி வருகின்றது. அந்நிறுவனத்தின் நிதி அனுசரணையோடு  இளைஞர் அபிவிருத்தி அகம் 2012ஆம் ஆண்டு தொடக்கம் செயலாற்றி வருகின்றது. நாம் கூட்டுறவு அபிவிருத்தி சார்ந்த பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றோம்.” என்றார்.

இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட வறுமை நிலையிலுள்ள மாணவர்கள் 200 பேருக்க சுமார் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள்பகிர்டந்தளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் விரும்பிகள் உட்பட இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அலுவலர்களான நிறோஜினி விநாயகம், லதா ரவீந்திரராஜா ஆகியோரும் பங்குபற்றினர்.

சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் கூட்டுறவுத்துறை சார்ந்த திட்டங்களையும், பெண்கள் வலுவூட்டலோடு அபிவிருத்திகளை உறுதிப்படுத்தும் வகையில் பயிற்சிகள், செயலமர்வுகள், விழிப்புணர்வுகள், தொழில்துறை உற்பத்திக் கண்காட்சிகள், கற்றல் கள விஜயங்கள், பொருளாதார வாழ்வாதார உதவு ஊக்கங்கள் என்பனவற்றை வழங்கி வருகின்றது.











SHARE

Author: verified_user

0 Comments: