(சாய்ந்தமருது நிருபர்)
பட்டிருப்பில் ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு.
பட்டிருப்பு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் “திருமுறை ஓதுவோம் சிவனடி சேருவோம்" எனும் தலைப்பில் திருக்கைலாய கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன சிறிகார்யம் சிவநெறி பிரசாரகர் சிறிமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் அவர்களது ஆன்மீக சொற்பொழிவு பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிகுடியில் வெள்ளிக்கிழமை (15.12.2023) நடைபெற்றது.
பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள பாடசாலையின் மாணவத் தலைவர்கள் ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் ஊர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு ஆசிர்வாதமும் பெற்றுக் கொண்டனர்.
0 Comments:
Post a Comment