26 Dec 2023

மட்டக்களப்பு புளியந்தீவு ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை.

SHARE

மட்டக்களப்பு புளியந்தீவு ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை.

கிழக்கு மாகாணத்தில் சுனாமி  தாக்கத்தினால் அதிக உயிர்கள் காவு கொள்ளப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமியினால் உயிர் நீத்த உறவுகளின் 19ஆவது ஆண்டு நினைவஞ்சலி பூசைகள் மாவட்டத்தின் பல பகுதிகளிலும்  உள்ள இந்து ஆலயங்களில் செவ்வாய்கிழமை(26.12.2023) காலை அவர்களுக்கு ஆத்மா சாந்தி வேண்டி உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை மட்டக்களப்பு புளியந்தீவு ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்திலும் சுனாமி தாக்கத்தின் போது பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்து ஆலய பரிபாலன சபையின் தலைவர். சி.மங்களராஜன் தலைமையில் விசேட நினைவஞ்சலி பூஜை இடம்பெற்றது.

ஆலயத்தின் பிரதம குரு சிவ ஸ்ரீ கணேச ரிவிசாந்த குருக்கள் இதனை நிகழ்த்தி வைத்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல்லாசி வேண்டியும் இனிமேல் இவ்வாறான ஒரு அனர்த்தம் நிகழாமல் இருக்க இறைவணக்கம் முன்னெடுக்கப்பட்டதுடன், இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக நினைவுச்சுடர் ஏற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டன.

இதன் போது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் ஆலய பரிபாலன சபையின் உறுப்பினர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.












SHARE

Author: verified_user

0 Comments: