22 Dec 2023

சமூகத்தை வழிநடத்த இளையோரையும் பெண்களையும் உள்ளடக்கிய சமூக வலையமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன-அஜானி காசிநாதர்

SHARE

சமூகத்தை வழிநடத்த இளையோரையும் பெண்களையும் உள்ளடக்கிய சமூக வலையமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன-அஜானி காசிநாதர்.

சமூகத்தை வழிநடத்த இளையோரையும் பெண்களையும் உள்ளடக்கிய சமூக வலையமைப்புக்கள் உருவாக்கப்பட்டு வருவதாக சேர்க்கிள் ( (CIRCLE) இளம் பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி காசிநாதர் தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் இளைஞர் வலையமைப்பின் நிலைத்தன்மை பற்றிய கலந்துரையாடல் செயலமர்வு மட்டக்களப்பு வாலிப கிறிஸ்தவ இயக்க மண்டபத்தில் வியாழக்கிழமை ( 21.12.2023) இடம்பெற்றது.

மாவட்டத்திலுள்ள மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கள உதவியாளர்கள், சிறுவர் உரிமைகள் அபிவிருத்தி அலுவலர்கள், சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள், இளைஞர் சேவைகள் மன்ற அலுவலர்கள் பெண்கள் மற்றும் இளைஞர் வலையமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் மத்தியில் பரிந்துரைப்பு செயலமர்வைத் துவக்கி வைத்து அவர் உரையாற்றினார்.

இளையோரும் பெண்களும் பார்வையாளர்களாகவன்றி பங்கேற்பாளர்களாக மாறி சமூகத்தில் அபிவிருத்தியையும் சகவாழ்வையும் ஏற்படுத்த வேண்டும் அதுவே நிலையான தங்குதிறனுள்ள முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதால் இத்தகைய சமூக மட்ட வலையமைப்புக்கள் சமூகப் பங்களிப்போடு உருவாக்கப்படுகின்றன.

இளைஞர்களும் பெண்களும் பரிந்துரைப்பு முயற்சிகளில் ஈடுபட்டு, அதன் விளைவாக சமூகத்தை வழிநடத்திச் செல்ல வேண்டும்.

கிராம மக்கள் உள்ளுரில் கிடைக்கக் கூடிய வளங்களை உச்ச மட்டத்தில் பயன்படுத்திக் கொள்வதற்கும் கிடைக்கக் கூடிய அரச அரச சார்பற்ற சேவைகளை இலகுவில் அணுகுவதற்கும் வலையமைப்புக்கள் செயல் திறனுள்ளதாக செயற்பட வேண்டும்.

இந்த அணுகுமுறை உள்ளுரில் சிறந்த தலைமைத்துவங்களை உருவாக்குவதற்கும் ஓரங்கட்டலைத்  தவிர்த்து பயனுறுதி மிக்க சேவைகளைப் பெற்றக் கொள்வதற்கும் வழிவகுக்கும்.

குறிப்பாக  வலைமைப்புக்கள் மூலம் சமூக மக்களால் அடையாளங் காணப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு தேவைகளையும் இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும். இதுவே இந்த வலையமைப்புச் செயற்பாட்டில் உள்ள சிறப்பம்சமாகும். 

எனவே, இந்த விடயத்தில் இளையோரினதும் பெண்களினதும் வகிபாகம் மிக முக்கியமானது என்பதைக் கருத்திற் கொண்டு உள்ளுர் மட்டத்தில் செயல்பாட்டு வலையமைப்புக்கள் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்றன. அதில் பங்கெடுக்கும் வலையமைப்பக்களை வலுப்படுத்தவற்கான உதவு ஊக்கங்கள் சேர்க்கிள் அமைப்பினால் வழங்கப்பட்டு வருகின்றன. வலையமைப்புக்களை  வலுப்படுத்தும் வகையில் அதிலுள்ள இளையொரக்கும் பெண்களுக்கும் பயிற்சிகள், செயலமர்வுகள், விழிப்புணர்வுகள், தொழில்துறை உற்பத்திக் கண்காட்சிகள், கற்றல் கள விஜயங்கள், பொருளாதார வாழ்வாதார உதவு ஊக்கங்கள் வழங்கப்பட்டுள்ளனதெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இளைஞர்கள் மற்றும் சமூகத்தினரிடையே சமாதானத்தை கட்டியெழுப்பும் செயல்முறையின் தொடர்ச்சியான வழிமுறைகளைப் செயற்படுவதே எமது நோக்கமாகும்” என்றார்.

இந்நிகழ்வில் பிரதேச வலையமைப்புpன் சேவையை வினைத்திறனுள்ளதாகவும் இலகுவானதாகவும் ஆக்க மூன்று வலையமைப்புக்களுக்கு தலா 25000 ஆயிரம் ரூபாய் பெறுமதியான எழுது கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.










SHARE

Author: verified_user

0 Comments: