20 Dec 2023

தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து களுவாஞ்சிகுடி சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

SHARE

தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து களுவாஞ்சிகுடி சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களினால் இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்புச்சாலை போரூந்து சாரதி தாக்கப்பட்டமைக்கு நீதி வேண்டி புதன்கிழமை(20.12.2023) களுவாஞ்சிகுடி சாலை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக கொக்கட்டிச்சோலை போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த முறைப்பாடு தொடர்பாக இது நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும்  இலங்கை போக்குவரத்துச் சபையின் களுவாஞ்சிகுடி போக்குவரத்து சாலை ஊழியர்கள் கவலை தெரிவித்தனர்.

இந்த தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை இன்று எடுக்கப்படாவிட்டால் பணிபகிஸ்கரிப்பு தொடரும் எனவும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் களுவாஞ்சிகுடி போக்குவரத்து சாலை ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு களுவாஞ்சிகுடி சாலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.












 

SHARE

Author: verified_user

0 Comments: