5 Dec 2023

வன்னி ஹோப் நிறுவனத்தினால் இரண்டாம் கட்டமாக திருமலை வைத்தியசாலைக்கு 60 கண் வில்லைகள் வழங்கி வைப்பு

SHARE

வன்னி ஹோப் நிறுவனத்தினால் இரண்டாம் கட்டமாக திருமலை வைத்தியசாலைக்கு 60 கண் வில்லைகள் வழங்கி வைப்பு.

அவுஸ்ரேலியாவை தலைமையகமாகக் கொண்டு இலங்கையில் பணிபுரியும் வன்னி ஹோப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சை வில்லைகளின் தொகுதிகள் இரண்டாம் கட்டமாக  வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க கண் சத்திர சிகிச்சை நோயாளர்களின் நலன் கருதி குறித்த கண் வில்லைகள் (intraocular lens) வழங்கி வைக்கும் நிகழ்வு வன்னி ஹோப் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.ரீ.எம். பாரிஸினால் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எல்.டபிள்யு. ஜயவிக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது.   

தற்போதைய நாட்டில் நிலவிவரும் பொருளாதார நிலமைகளைக் கருத்திற் கொண்டு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண் நோயாளர்கள் கண் சத்திரசிகிச்சையின் போது தேவையான கண் வில்லைகளை தாங்களாகவே கொண்டு வரும் நடைமுறை இருந்து வந்தது. குறித்த கண் வில்லைகளை கொள்வனவு செய்வதில் நோயாளர்கள் பல சௌகரியங்களை எதிர் நோக்கி வந்ததுடன் வைத்தியசாலை நிர்வாகமும் பல இடர்பாடுகளையும் சந்தித்தது.

இந்த நிலமைகளை கருத்திற் கொண்டு அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த உதவியை வன்னி ஹோப் நிறுவனம் இரு தடவைகள் வழங்கியதையிட்டு திருமலை மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகம் வன்னி ஹோப் நிறுவனத்திற்கும் அதன் கொடையாளர்களுக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.










SHARE

Author: verified_user

0 Comments: