14 Dec 2023

60வது அகவையில் 60 பொன்னாடைகளால் கௌரவிக்கப்பட்ட மண்முனை மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர்.

SHARE

60வது அகவையில் 60 பொன்னாடைகளால் கௌரவிக்கப்பட்ட மண்முனை மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் மண்முனை மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளராக சேவையாற்றி தனது அறுபதாவது அகவையில் ஓய்வுபெறும் சுப்பிரமணியம் முருகேசப்பிளை அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா அவருடைய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை (11.12.2023) பழைய மாணவரும் அதிபருமாகிய .புஸ்பாகரன் அவர்களின் தலைமையில் மட்.மமே.காயான்மடு சரஸ்வதி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கலை கொஞ்சி விளையாடும் கன்னன்குடா மண்ணில் 1963.12.12 அன்று பிறந்த சு.முருகேசப்பிள்ளை அவர்கள் தரம் ஒன்று தொடக்கம் தரம்-11 வரை தான் பிறந்த மண் மட்.கன்னன்குடா மகா வித்தியாலயத்திலும் உயர்தரக்கல்வியை மட்.இந்துக்கல்லூரியிலும் கற்று பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தனது இளங்கலைமானி பட்டத்தைப் பெற்று 1988 ஆம் ஆண்டு மட்.தாண்டியடி ...பாடசாலையில் ஆசிரியராக இணைந்து கொண்டார். அதனைத்தொடர்ந்து மட்.கரையாக்கன்தீவு கணேசர் வித்தியாலயத்தில் ஆசிரியராச் சேவையாற்றி மட்.காயான்மடு .. பாடசாலையின் ஸ்தாபகராகவும் 6 வருடங்கள் அதிபராகவும் தடம்பதித்தார்.

தொடர்ந்து தான் பிறந்த மண் மட்.கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் 12 வருடங்கள் சிறந்த அதிபராக சேவையாற்றி ஏறாவூர்ப்பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்து மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளராகவும் அதனையடுத்து மண்முனை மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளராகவும் சேவையாற்றியதோடு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் மூன்று கோட்டங்களிலும் கோட்டக்கல்விப் பணிப்பாளராக சேவையாற்றிய பெருமை இவரை மாத்திரமே சாரும். தனது கல்விப்பயணத்தில் 4 வருடங்கள் ஆசிரியராகவும் 18 வருடங்கள் அதிபராகவும் 13 வருடங்கள் கோட்டக்கல்விப் பணிப்பாளராகவும் சேவையாற்றி ஓய்வுபெறும் படுவான்கரை மண்ணின் மைந்தனை அவரது பழைய மாணவர்கள் சிறப்பாக கௌரவித்தனர்.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அன்னாரின் 60 வது அகவையில் 60 மங்கல விளக்குகள் ஏற்றி 60 பொன்னாடைகளால் கௌரவம் வழங்கப்பட்டதோடு அவரின் பெற்றோருக்கான கௌரவமும் சிறப்பாக வழங்கப்பட்டன. நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் யு.வை.ஜெயச்சந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள், பொது அமைப்புகள், சமூக நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.










SHARE

Author: verified_user

0 Comments: