22 Dec 2023

மட்டக்களப்பில் நடைபெற்ற 38 வது தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் கடெற் வோக்

SHARE

மட்டக்களப்பில் நடைபெற்ற 38 வது தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் கடெற் வோக்.

தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் 142 வருட நிறைவினை முன்னிட்டு வெள்ளிக்கிழமை(23.12.2023) மட்டக்களப்பில் தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் கடெற் வோக் இடம்பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலில் பாதுகாப்பு அமைச்சின் நிகழ்சி நிரலுக்கு அமைவாக  தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் சிறப்பம்சங்களை வெறியுலகிற்கு வெளிப்படுத்தும் வண்ணம் தேசிய ரீதியில் இந்த கடெற் வோக் இடம்பெற்று வரும் நிலையில், மட்டக்களப்பில் 38 வது தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் கடெற் வோக் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

38 வது தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் கட்டளைத் தளபதி லெப்டணன் கேணல் ஜீ.டபிள்யு.எச்.நிலந்த தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நடை பவனி மட்டக்களப்பு அரசடி சந்திவரை சென்று அங்கு பாண்ட் வாத்திய அணியினர் மற்றும் மாணவர் படையணியின் அணிவகுப்பு மரியாதை என்பன இடம்பெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளீதரன் கலந்து கொண்ட நிகழ்வில், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் .வாசுதேவன், பொலிஸ் உயர் அதிகாரிகள், கல்வி திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நடைபவணியில் மட்டக்களப்பு மத்திய கல்லூரி, புனித மிக்கேல் கல்லூரி, மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயம், வின்சன்ட் உயர்தர மகளீர் தேசிய பாடசாலை, உள்ளிட்ட பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










SHARE

Author: verified_user

0 Comments: