3.7 மில்லியனில் நிருமானிக்கப்பட்ட ஆரோக்கிய வாழ்வு மைய சாய்சாலைக் கரியாலயம் திறந்து வைப்பு.
களுதாவளை ஆரம்ப மருத்துவ சிகிச்சைப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியும், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் கழிவு முகாமைத்துவ பிரிவுpப் பொறுப்பு வைத்தியருமான வைத்திய கலாநிதி கே.மயூரேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன், கிராமிய வீதி அபிவிருத்தி அமைச்சரின் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் வைத்திய அதிகாரிகள், களுதாவளை கிராம பொது அமைப்புக்களின் பிரதானிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
அண்மையில் சர்வதேச ரீதியில் நடைபெற்ற கழிவு தர முமாமைத்துவ போட்டியில் கலந்து கொண்டு தங்க விருதை வென்றுள்ள வைத்திய கலாநிதி கே.மயூரேசன் அவர்களின் சேவைக்கு இதன்போது கலந்து கொண்டிருந்த அதிதிகள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment