15 Nov 2023

வாழைச்சேனை திடீர் மரண விசாரணை அதிகாரியாக வடிவேல் றமேஸ் ஆனந்தன் நியமனம்.

SHARE

வாழைச்சேனை திடீர் மரண விசாரணை அதிகாரியாக  வடிவேல் றமேஸ் ஆனந்தன் நியமனம்.

கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவு முழுவதற்குமான திடீர்மரண விசாரணையாளராக கறுவாக்கேணி வாழைச்சேனையைப்  வசிப்பிடமாக கொண்ட வடிவேல் றமேஸ் ஆனந்தன்  நீதி, சிறைச்சாலைகள் அமைச்சால் நடைபெற்ற நேர்முகப்பரீட்சையில்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் திடீர்மரண விசாரணையாளராக வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எம். ஐ. எம். றி ஸ்வி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

வடிவேல் றமேஸ் ஆனந்தன்  ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு இவர் கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில்   திடீர் மரண விசாரணையாளராக  நியமிக்கப்பட்டிருந்தார்  இவர் கால்குடா பொலீஸ் பிரிவு வாழைச்சேனை பொலீஸ் பிரிவு  வாகரை பொலீஸ் பிரிவு கடமையாரியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் உளநல டிப்ளோ மா மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மரண விசாரணை டிப்ளோமா பூர்த்தி செய்தவர் இவர் சந்திவெளி விவேகானந்தா அறநெறி பாடசாலையின் பொறுப்பாசிரியரும், கிராமிய அபிவிருதி திட் டமிடல் அமைப்பின்(RDPO) பணிப்பாளர அத்துடன் மாணிக்கவாசகர் சிறு வர் பராமரிப்பு இல்லத் தின் முகாமையாளர் இவர்  சமய, சமூக செயற்பாடுகளில் முன்னின்று செயல்படுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது






SHARE

Author: verified_user

0 Comments: